
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அண்மையில் மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது மனைவி, மகள், மகனுடன் இருக்கும் புது புகைப்படத்தை வெளியிட்டார்.
முதல் முறையாக சிவகார்த்திகேயன் தனது மகன் குகனின் முகத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார். இந்த நிலையில் அவர் பகிர்ந்து இருந்த குடும்ப புகைப்படம் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்து படு வைரலாகி வருகின்றது.
View this post on Instagram