
முகத்தில் ஏற்படும் பல்வேறு விதமான தோல் பிரச்சனைகளுக்கு காரணமாக தலையணை இருக்கின்றது. ஆனால் இந்த விஷயம் பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. எனவே சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் தலையணைக்கும் இருக்கும் சம்பந்தத்தை இந்த தொகுப்பின் வழியாக தெரிந்து கொள்ளுங்கள். நாம் பல நாட்களுக்கு ஒரே தலையணை உறையை பயன்படுத்துவது இப்பிரச்சினைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
இரவில் உறங்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் திசுக்கு மற்றும் இறந்த செல்கள் தலையணை உறையில் படிந்து விடும். இதனால் தோலில் அலர்ஜி ஏற்படுத்தும் கிருமிகள் உண்டாகும். அதுபோல பல நாட்கள் ஒரே தலையணை உறையை பயன்படுத்துவதால் தூசு, தேவையில்லாத மாசு பொருட்கள் தலையணை உறையில் அதிகரிக்கும்.
எனவே தொடர்ந்து அதே உறையில் தூங்குவதால் முகத்தில் பிம்பிள்ஸ், ஆக்னே போன்ற விஷயங்கள் உருவாவது அதிகரிக்கும். அது போல நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு படுக்கையில் விளையாடும் சமயத்தில் அதன் முடி அல்லது விலங்கு ரீதியான கிருமிகள் தலையணை உறையில் ஒட்டிக் கொள்ளும். அதே உரையில் நீங்கள் தூங்குவதால் முகத்தில் தோல் வெடிப்புகள் ஏற்படும்.
எனவே இதனை சரி செய்ய வாரத்திற்கு ஒரு முறை தலையணை முறையை மாற்ற வேண்டும் அல்லது துவைத்து பயன்படுத்த வேண்டும். அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆய்வில் வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறையை மாற்றி பயன்படுத்துபவருக்கு பிம்பிள்ஸ், தோல்வெடிப்பு போன்ற பிரச்சனைகள் குறைவாக ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல காட்டன் துணிகளை பயன்படுத்துவதை விட சில்க் துணிகளை தலையணை முறையாக பயன்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதற்கு காரணம் சில்க் துணி வகைகளை மற்ற துணி வகைகளோடு ஒப்பிடும்போது சில்க் மற்றும் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். இதனால் முகத்தில் இருக்கும் எண்ணை திசுக்கை மிக குறைவாக உறிஞ்சும்.