சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் புதிய வகை வைரஸ் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இருமலுடன் காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தும் H3 N2 எனப்படும் துணைவகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 92 சதவீத நோயாளிகளுக்கு காய்ச்சலுடன் இரும்பல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு இருக்கிறது.

மூச்சு திணறல் அதிகம் உள்ள நோயாளிகள் சுவாசக் கோளாறு சரி செய்வதற்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் காய்ச்சல் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மார்ச் மாத இறுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.