தெரு உணவுகளை விரும்புவர்கள் உணவின் சுவை மட்டுமல்ல, அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை கவனிப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். உணவு தயாரிக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இதற்காகவே உணவு விடுதிகளும் வித்தியாசமான உணவுகளை தயாரிக்க தொடங்கி விட்டது. அது போல தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் தெரு உணவு விற்பனையாளர் ஒருவர் தோசை மாவை வட்டவடிவில் கல்லின் மீது பரப்புகிறார். முதலில் சாதாரண தோசை போல ஆரம்பிக்கிறது.

பின்னர் தோசை அருகிலேயே இன்னொரு வட்டத்தை உருவாக்குகிறார். அதன் பின்னர்தான் அவர் வரைவது பூனை என்று தெரிகிறது. காது, மூக்கு, கண்கள், வாய் என்று எல்லாம் வரைந்து அழகாக பொம்மை தோசை சுட்டு அதை சுருட்டி சட்னி சாம்பாருடன் பரிமாறுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி குழந்தை வயதில் நாம் சாப்பிட்ட பொம்மை தோசையை இப்போதும் நாம் சாப்பிட அட்டகாசமான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றும் தோசை பிரியர்கள் மட்டுமல்லாமல் பொம்மை தோசையை நினைத்து ஏங்குபவர்களையும் பெரிதாக இந்த தோசை ஈர்க்கிறது என நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.