தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு காரணம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 18 பேர் ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். 18 பேரின் மரணத்திற்கு ஆளுநர் தான் காரணம். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் ஆளுநர் 45 நாட்களில் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி மசோதாவை திருப்பி அனுப்பி விட்டு அதற்கு ஆளுநர் விளக்கம் கேட்கிறார். மேலும் ஆளுநரின் செயல் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.