அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அதிமுகவினர் சிலர் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. சமீபத்தில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் ரவி தலைமையில் இந்த உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.