
Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விபரங்கள்
# Skilled Artisans பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
# அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும்.
# விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.
# விண்ணப்பதாரர்கள் Trade Test வாயிலாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
# அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய்.19,900/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் இருப்பவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நாளை மார்ச்-11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.