மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் மதுரை மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதற்கு முன்னதாக கொள்முதல் விலை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆவின் மதுரை மேலாளர் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.