
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூரியா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சூர்யா 42 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உறுதிப்படுத்தியுள்ளார். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் தற்போது விடுதலை பட சூட்டிங் நிறைவடைந்ததால் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Suriya42 Promo shoot happening today…. 1st look & promo coming soon… 💥
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 11, 2023