தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக பல புகார்கள் எழுந்தன. இதனால் பெரும்பாலான கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்ததால் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களுக்கு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.