அமெரிக்காவில் கௌஸ்டான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 90 வயது உடைய ஆமை தன்னுடைய துணையுடன் கடந்த 36 வருடங்களாக வசித்து வருகிறது. அந்த ஆமைக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் அதன் பெயர் பிக்கில்ஸின்.

இந்நிலையில் தற்போது 90 வயது உடைய ஆமையின் துணை முட்டையிட்டு 3 குஞ்சுகளை பொரித்துள்ளது. இதன் மூலம் 90 வயது உடைய பிக்கில்ஸின் முதல் முறையாக தந்தையாகியுள்ளது. மேலும் தற்போது பிறந்த 3 குட்டி ஆமைகளுக்கும் தில், கெர்கின், ஜலபென்னா என்று பெயர் வைத்துள்ளனர்.