கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பட்டி காலனியில் 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் சிறுமிகளின் வீட்டிற்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் சிறுமிகளின் பாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியை காண்பித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவன் மற்றும் மீன்பிடி தொழிலாளியான சிவகுமார்(21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.