
ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவிற்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானமானது புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானியும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் தன்பாத்திலுள்ள பர்வாடா விமான தளத்திலிருந்து கிளம்பிய அந்த விமானமானது, 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் உரிய விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Live Plane Crash#accident #planecrash #Aircraftcrash #dhanbad pic.twitter.com/4NjrSU27uZ
— Chiranjivi Singh🇮🇳 (@chiranjivi470) March 23, 2023