
வானில் ஏதாவது ஒரு அரிய நிகழ்வு அவ்வப்போது நடப்பது வழக்கம். அந்த வகையில் பிறை நிலவை வெள்ளி கோள் கடந்த அரிய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. இதனை பொதுமக்கள் சில நிமிடங்கள் வெறும் கண்களாலேயே கண்டுகளித்தார்கள். இது குறித்து விஞ்ஞானியானஎபினேசர் கூறுகையில் வானில் பிறை நிலவின் பின்னணியில் வெள்ளிக் கோள் கடந்த நிகழ்வு இரவு ஏழு முதல் எட்டு மணி வரை நடந்தது. வானில் நிலவும் பல அதிசயங்களில் இதுவும் ஒன்று. இந்த நிகழ்வானது அடுத்ததாக 2026 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் வானில் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.