அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள EPS-க்கு நடிகர் அஜித் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக மீது தனி பாசம் கொண்ட அஜித், நேரடியாக ஆதரவு கொடுக்காமல் இதுபோன்று மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார். ஜெயலலிதா மறைத்த சமயத்தில் அஜித் தான் அடுத்த அதிமுக தலைமை என பேசப்பட்டது. அந்த அளவிற்கு அஜித்-அதிமுகவினர் இடையே நல்ல நட்பு இருக்கிறது.