
உலகம் முழுவதும் நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஓராண்டு காலத்தில் ஸ்விக்கி நிறுவனம் 3.30 கோடி பிளேட் இட்லிகளை வீடுகளுக்கு டெலிவரி செய்துள்ளது. அதில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரே நபர் கடந்த ஓராண்டில் ஆறு லட்சம் ரூபாய்க்கு 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்துள்ளார்.
தனக்கு மட்டுமல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என அடிக்கடி பெங்களூரு மற்றும் சென்னைக்கு ரயிலில் செல்லும் போது ஆர்டர் செய்துள்ளார். தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை தான் இட்லி அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தான் இட்லி அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.