கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள், ரத்தினபுரியில் வசிக்கும் சியாம்(28), போத்தனூரில் வசிக்கும் சாதிக்(28), கரும்பு கடையில் வசிக்கும் சுல்தான்(27) என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 258 போதை மாத்திரைகள், 32 பாட்டில் சோடியம் குளோரைடு, 10 ஊசி, 14 சிரஞ்சு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.