
16வது IPL கிரிக்கெட் தொடரின் 4வது லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதிக்கொண்டது. இதில் ராஜஸ்தான் அணியானது 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதன்பின் ராஜஸ்தான் அணி வருகிற 5-ம் தேதி நாளை பஞ்சாப் அணிக்கு எதிராக மோதுகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விமானத்தில் அமர்ந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இதை ராஜஸ்தான் அணி தன் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த வீடியோவின் பின்னணியில் ரஜினி படையப்பா பட தீம் மியூசிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram