கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கடந்த 22 நாளாக கோடை மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பகல் நேரம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.