
தெலுங்கானா மகபூபாத் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு கறி விருந்து கிடைக்காது என நினைத்து குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தொண்டர்கள் இழுத்துக் கொண்டு ஓடினர்.
அதுமட்டுமின்றி பலர் சாப்பாட்டுக்கு முட்டி மோதிக்கொண்டனர். இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை சரி செய்தனர். இவ்வாறு கறிசோறுக்கு ஆளுங்கட்சி தொண்டர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.