
தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஆண்டு அட்டவணையின் படி 1-ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் வருகிற 24-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நாளை தொடங்குகிறது.
இந்த தேர்வுகள் வருகிற 24-ஆம் தேதி முடியும். வருகிற 28-ஆம் தேதி பள்ளியின் கடைசி வேலை நாள் ஆகும். இறுதியாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகும் வருகிற 28-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வேலைக்கு வருவார்கள். 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என கூறியுள்ளார்.