16வது IPL கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற CSK  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜாஸ் பட்லர் உடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக விளையாடினார்.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார். CSK வீரர் ஜடேஜா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். கடைசியில் ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் சென்னை அணியானது களமிறங்கியது.

போட்டியின் கடைசியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்து குவித்தனர். இறுதியில் சென்னை அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் வாயிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.