
தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா அமைப்பு இணைந்து ஹீரோ ஆசியா சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியை சென்னையில் நடத்துகின்றது.
இந்தப் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும். சென்னையில் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஆசிய ஹாக்கி போட்டியில் நடைபெற உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த போட்டியில் ஜப்பான் உழைத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.