
கொரோனா பரவலானது கடந்த இரண்டு வருடங்களாகவே படாதபாடு படுத்திவிட்டது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. மேலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையில் கொரோனா பரவல் சரியாகிவிட்டதால், ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்த பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியச் சொல்லிவிட்டன.
இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே ஊழியர் இருந்தால், அவர் மே 2 முதல் மே 15 வரை அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.