
சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பங்களிப்பு தொகையை திரும்ப பெற தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சத்தீஸ்கரின் நிதித்துறை இணை செயலாளர் ஆஷிஷ் பாண்டே உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மாநில அரசு நடைமுறைபடுத்தி இருக்கிறது என்றார். ஏப்ரல் மாத சம்பளத்திலிருந்து பொது வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு, உயிரிழப்பு (அ) ராஜினாமா ஆகியவையின் போது, பங்களிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஊழியர்கள் திரும்ப பெறத் துவங்கியுள்ளனர். இது நடந்தால் எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சூழ்நிலையானது உருவாகும்.