
தமிழகத்தின் நிதியமைச்சர் பீடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை முதல் ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் மற்றும் மருமகன் 30000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்துள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் பேசுவது போல் இருந்தது. அதன் பிறகு இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சியை அவர் விமர்சிப்பது போன்று இருந்தது. ஆனால் அமைச்சர் பீடிஆர் ஆடியோவில் நான் இல்லை தொழில்நுட்பத்தின் உதவியால் ஜோடிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த விளக்கத்திற்கு பாஜக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இது கோழைத்தனமான பதில். தயக்கத்தோடு பயத்தோடு கூடிய விளக்கம். இந்த மனிதரின் இயல்புக்கு எதிரான வசனம். இன்னும் சில ஆடியோக்கள் வெளிவரும் போதும் மேலும் கதை திரைக்கதை வசனத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன்மூலம் மேலும் சில ஆடியோக்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்கள் மேலும் வெளி வரும்? pic.twitter.com/WHAdT1Wfrt
— Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்) (@narayanantbjp) April 26, 2023