ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் வாயிலாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகினார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் ருத்ரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் வீடியோ பாடலை படக்குழுவானது வெளியிட்டு உள்ளது. சத்திய பிரகாஷ் , நித்யஸ்ரீ குரலில் வெளியாகிய இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.