தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் போதிய வரவேற்பை பெறவில்லை. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை உதவியுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதற்காக சிகிச்சை பெற்ற நிலையில் நோயிலிருந்து மீண்டு ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொண்டார். ஆனால் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.