தமிழகத்திற்குள் பாசிஸ்டுகள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் திவிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “இது தமிழ்நாடு, இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கிய நிலையில் இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட இயக்க வரலாறு மாநில சுயாட்சி என இரண்டு தலைப்புகளில் கடந்த ஆறு மாதங்களாக இளைஞர்களுக்கு பயிற்சி பாசறையை முடித்துள்ளோம்.

சேப்பாக்கம் தொகுதியில் இயக்க படிப்பாகம் அருகில் உள்ள பெரியார் சிலையை வணங்கிவிட்டு தான் என்னுடைய அலுவலகத்திற்கு செல்வேன். நான் இந்த நிகழ்ச்சியில் அமைச்சராக வரவில்லை. திராவிட கொள்கையில் பிடிப்பு உள்ளவனாக கலந்து கொண்டு உள்ளேன். சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட மாநிலம் தற்போது தமிழ்நாடு என பெயர் பெற்றுள்ளது. திராவிட கொள்கையில் பிடிப்பு உள்ளவனாக சொல்கிறேன் நமது பேரன் பேத்திகள் காலத்திலும் இந்த நிலம் தமிழ் நாடாகவே இருக்க வேண்டும். அதற்கு பாசிஸ்டுகளையும் பாசிச அடிமைகளையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.