
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிய முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரிசல்ட் டேபில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உள் நுழைவுச் சான்றுகளான ரோல் நம்பர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.