நம் நாட்டில் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதால் பலர் அதில் முதலீடு செய்ய இருக்கின்றனர். அதன்படி அஞ்சல் துறை RD திட்டம் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். இத்திட்டத்தில் வைப்பாளர்களுக்கு 6.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதோடு இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு மாதம் ரூ.100 (அ) ரூ.10-ன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகையாகும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதற்குரிய வரம்பு எதுவுமில்லை. அதுமட்டுமின்றி தபால் அலுவலக RD திட்டத்திலுள்ள வைப்புத் தொகைகள் கணக்கை தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களில் முதிர்ச்சியடையும். அத்துடன் கணக்கு வைத்திருப்போர் விண்ணப்பத்தை சமர்பிப்பதன் வாயிலாக கணக்கை மேலும் 5 வருடங்கள் நீட்டிக்கலாம்.

ரூ.5000 மாத பங்களிப்பு RD திட்டத்தில் மாதாந்திர பங்களிப்பு ரூ.5000 எனில் 5 வருடங்களில் 3.52 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 5 வருடங்கள் கணக்கை நீட்டித்தால், 10 ஆண்டுகளில் கார்ப்பஸ் ரூபாய்.8.32 லட்சமாக இருக்கும். ரூ.1000 பங்களிப்பு RD திட்டத்தில் மாதாந்திர பங்களிப்பு ரூ.1000 எனில் 5 வருடங்களில் ரூ. 70,431 கார்பஸ் கிடைக்கும். அதை 5 வருடங்கள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.1.66 லட்சம் ஆக இருக்கும். ரூ.10 ஆயிரம் பங்களிப்பு RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10000 செலுத்தினால் 5 வருடங்களில் ரூ.7.04 லட்சம் கார்பஸ் கிடைக்கும். அதனை 5 வருடங்கள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில் மொத்தம் கார்ப்பஸ் ரூ.16.6 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.