
அதிமுக தலைமை கழக பேச்சாளர் டி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுகவில் பயணித்த அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வைத்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று அவர் உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.