
கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் படகு போக்குவரத்து முடிவடையும் நிலையில் நேற்று 5 மணி தாண்டியும் படகு போக்குவரத்து நடந்துள்ளது. இரவு நேரம் நெருங்க நெருங்க படகிற்கு போதிய வெளிச்சம் கிடைக்காததோடு, அதிக அளவு பாரபத்தின் காரணமாக நதியில் படகு கவிழ்ந்தது. 25 பேரை ஏற்ற வேண்டிய டபுள் டக்கர் படகில் 40 பேரை ஏற்றி சென்றுள்ளது தான் விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படகு கவிழ்ந்தது கரையில் இருந்த சிலருக்கு தெரியவந்ததை எடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேரில் மூழ்கிய படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இந்தப் படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.