+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது காதலி துக்கத்தில் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவரது மரணமும் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல்விக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் எனவும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது