
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் அவரே கவனிப்பார். தங்கம் தென்னரசு விடமிருந்த தமிழ் வளர்ச்சித் துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு – நிதி, மனிதவள மேம்பாடு
டி.ஆர்.பி.ராஜா – தொழில்துறை
சாமிநாதன் – தமிழ் வளர்ச்சி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம்
மனோ தங்கராஜ் – பால்வளத்துறை