
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 14-ம் தேதி இரவு 7.39 மணிக்கு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரசசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 1500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு 2000 மற்றும் 2500 ரூபாய்களுக்கான டிக்கெட்டுகளை கவுண்டர்கள், பேடிஎம் மற்றும் www.insider.in போன்றவைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
3000 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் விலைக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். மேலும் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.