தமிழகத்தில் 164 அரசு கல்லூரிகள் உட்பட மொத்தம் 1567 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.காம், பிபிஏ, பி சி ஏ மற்றும் பிஏ மொழி பாடங்கள் மற்றும் பொருளியல், வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் கூடுதலாக 15 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்க்கவும் உயர் கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனிடையே பிளஸ் 2 முடிவில் கணக்கு பதிவியல் பாடங்களில் மொத்தம் 12251 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று இருப்பதால் கல்லூரிகளில் பிகாம் பிரிவில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு கல்லூரியில் நானூறு பி காம் இடங்கள் இருந்தால் அதில் சேருவதற்கு சராசரியாக 14,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பிகாம் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.