
தென்காசி மேலப்பாவூரில் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஜாதி கலவரத்தை தூண்டி விடுவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது அவர் பிணையில் வெளிவந்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது “திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்த லாக்கப் டெத் தொடர்பாக சிவந்திபட்டி வழக்கு, அம்பாசமுத்திரம் பல் உடைப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்து பின்வாங்க வைப்பதற்கு காவல்துறை உயரதிகாரிகள் மறைமுகமாக என்னை அறிவுறுத்துகின்றனர். இதனிடையே சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. எனினும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.