தமிழக அரசின் வனத்துறை செயலாளராக இருப்பவர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ். இவர் தற்போது ஆமைகள் முட்டை போட்டு குஞ்சு பொரிப்பது தொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் ஆமைகள் முட்டைகள் போட்டு இனப்பெருக்கத்திற்கு தயாராகி வருகிறது. இது பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் தான் நடைபெறும்.

இதை வனத்துறை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உரிய முறையில் பாதுகாத்து முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவர உதவுகிறார்கள். பின்னர் அவற்றை கடலில் விட்டு அவர்களின் வாழ்க்கையை தொடங்கி வைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு வீடியோவையும் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.