
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்டா பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு முக அழகுக்காக பேசியல் செய்ய அழகு கலை மருத்துவரிடம் சென்று உள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளால் ரைசாவின் முகம் ஒரு பக்கம் வீங்கிவிட்டது.
அப்போது அந்த புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில் தவறாக சிகிச்சை அளித்த அழகு கலை மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நடிகை ரைசா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கண்கள் சிவந்து அழுது கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து எந்த பிரச்சனையாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க