
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மூன்றாவது மின் நிலுவை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தம் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் மின் இழுவை ரயில் நிலைய ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது இன்ஜினில் இருந்து ரயில் பெட்டியில் இணைக்கப்பட்ட இரும்பு சங்கிலி கழன்று தற்காலிக பணியாளர்களான சந்துரு, கார்த்தி ஆகியோர் மீது விழுந்தது. இதனால் காயமடைந்த இரண்டு பணியாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.