விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிலா என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அசிலா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அசிலாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து உசேன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசிலாவை தேடி வருகின்றனர்.