திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து சௌசௌ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தங்கப்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் நின்ற பால் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு வேன்களும் சாலையில் கவிழ்ந்தது.

மேலும் தங்கப்பாண்டி, பால் வேன் டிரைவர் பெருமாள் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.