தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த ரேஷன் கார்டு அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.இந்நிலையில் ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரிலோ அலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும். பெயரை நீக்க கூடாது. பெற்றோர்களும் குழந்தையின் ஆதார் எண் இணைக்க முன்வர வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.