மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  இன்று பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

கூடுதல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், காவல்துறையும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தெய் மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழக்க கோரி ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக மோதல் வெடித்து வருகிறது.