
அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தை தாக்கி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பைபர்ஜாய் புயல் தாக்கத்தால். 67 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக ரயில்கள் எச்சரிக்கையுடன் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.