விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆலியா மானசா சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வர சஞ்சீவ் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவா இருக்கும் ஆலியா மானசா அடிக்கடி தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நடந்து வருவது போல ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது உண்மையாக அடிபட்டது போல நினைத்தே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/Ctg63DNhO20/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==