ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்கச் சொல்லி வற்புறுத்துவதாக புகார் இருந்து வருகிறது. ஆனால் அரசின் விதிகளில் அப்படி எந்த உத்தரவு இல்லை. ரேஷன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை மட்டுமே வாங்கலாம். தேவையற்ற பொருட்களை வாங்க சொல்லி யாரும் வற்புறுத்த முடியாது. அதற்காக ரேஷன் அட்டை ரத்து என்று சொன்னாலும் நம்ப வேண்டாம். அது பொய். அப்படி யாராவது மிரட்டினால் உடனே அரசிடம் புகார் அளியுங்கள்.