
தமிழகத்தில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சமீபத்தில் 7301 ஆக இருந்த பணியிடங்கள் 10,748 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் பணியிடங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கட் ஆப் மதிப்பெண் குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. மறுபக்கம் 631 பணியிடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்ட இருப்பதால் கட் ஆப் மதிப்பெண்ணில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது எனவும் ஓரிரு மதிப்பெண் மட்டுமே சில பிரிவுகளில் குறையலாம் எனவும் கூறப்படுகிறது.
மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பது தான் கட் ஆப் என குறிப்பிடப்படுகின்றது. அதனால் கட் ஆப் மதிப்பெண்களில் மூன்று முதல் நான்கு மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம். அதே சமயம் தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் நான்கு முதல் ஐந்து வினாக்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. தட்டச்சு பணியிடங்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரையும் சுருக்கி எடுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 10 மதிப்பெண்கள் வரையும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.