
தொழில்நுட்ப உலகில் லேட்டஸ்ட் அப்டேட்டாக வெளியாகிய சாட்ஜிபிடி எனும் தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துக்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாஃப்ட் என அடுத்தடுத்த நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது. கூகுள் “பார்ட்” எனும் பெயரில் ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ தொழில்நுட்பமானது எண்ணற்ற தகவல்களை சேமித்து வைத்திருப்பதோடு, நம் தேவைக்கு ஏற்றவாறு பணிகளை செய்துதரக்கூடியதாக அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக ஒரு சில ஊழியர்கள் இணைந்து தான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலை மாறி, இன்றைக்கு நீங்கள் ஏஐ தொழில்நுட்பம் வாயிலாகவே இதை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களின் வேலைப் பளுவை குறைப்பதாக இது அமைந்திருக்கிறது. இந்நிலையில் பல நிறுவனங்களானது இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. கூகுள் பணியாளர்களும் கூட இதனை பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவை லீக் ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூகுள் நிறுவனம் கருதுகிறது. அதோடு ஏஐ தொழில்நுட்பம் உள் வாங்கும் தகவல்களை கொண்டு, அது தரவுகளை நகலாக வெளியிடக்கூடும் என கருதப்படுகிறது. இதுபற்றி கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது “சாஃப்ட்வேர் ப்ரோகிராம் உருவாக்கத்தில் தேவையற்ற பரிந்துரைகளை பார்டு தொழில்நுட்பமானது வழங்கக்கூடும். எனினும் ப்ரோகிராமர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்.
இருப்பினும் இந்த தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாடுகளை வரையறுக்க விரும்புகிறோம்” என தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு பில்லியன் கணக்கில் டாலர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, இதனை பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது. கூகுள் நிறுவனம் தங்களது பார்டு ஏஐ தொழில்நுட்பத்தை உலகின் 180 நாடுகளில், 40 மொழிகளில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.